Morning Headlines: நாட்டின் இன்றைய நிகழ்வுகள்.. முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடுமா?
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். ” சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் இருக்கக்கூடாது...நான் நம்புகிறேன் ; நீங்கள் நம்பவில்லையா; நம்புங்கள். சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும்” என்றார். மேலும் வாசிக்க..
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி. சோதனை
சென்னையில் இன்று காலை முதல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துரைப்பாக்கம், பள்ளிக்கரனை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வாசிக்க..
மகளிர் இடக்கீடு மசோதா
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு இரு அவைகளிலும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அரசியலமைப்பு (128வது திருத்தம்) மசோதா 2023, நாரி சக்தி வந்தன் சட்டம் அல்லது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..
காவிரி விவகாரம் - சித்தராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டம் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கப்பட்டால், கர்நாடகா நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி நீர் விவகாரம் குறித்தும், கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு, தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்போவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
உயர்கிறதா ஆட்டோ கட்டணம்?
தமிழ்நாட்டில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கபப்டும் என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்துள்ளது. மேலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..
‘அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா?’ - வானதி சீனிவாசன் விளக்கம்
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “தேசிய தலைமை தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் இடத்தில் உள்ளது. அதனால் கூட்டணியில் தொடர்வதா?, யார் இருப்பது?, யார் கூட்டணியின் தலைமை எல்லாம் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும். அவ்வளவுதான். கூட்டணியைப் பொருத்தவரை இதை தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. கூட்டணி தொடர்பாக வேறு எந்த ஒரு பதிலையும், ஒரு வார்த்தையையும் சொல்ல நான் விரும்பவில்லை. கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். எப்படி கேள்வி கேட்டாலும், எனது பதில் இதுதான்” எனப் பதிலளித்தார். மேலும் வாசிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

