மேலும் அறிய

9 AM National Headlines: மணிப்பூர் கலவரம் முதல் நீட் ஹால் டிக்கெட் வரை.. இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!

ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.

  • வன்முறை பூமியாக மாறிய மணிப்பூர்..! கலவரத்திற்கு காரணம்தான் என்ன? 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்ன நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலையில், மாநில உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க  8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க

  • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - மணீஷ் சிசோடியாவே முக்கிய குற்றவாளி என குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை குற்ற பத்திரிகையில் முக்கிய குற்றவாளி என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்யும் 5ஆவது குற்றப்பத்திரிகை இதுவாகும். இந்த வழக்கில் பிணை கேட்டு சிசோடியா மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் படிக்க

  • சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணி கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசால் தொடங்கப்பட்ட முதற்கட்ட கணக்கெடுப்பு ஜனவரி 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  சாதி வாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம்  சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

  • விடாமல் துரத்தும் லே ஆஃப்.. 3,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காக்னிசென்ட்

நடப்பாண்டில் நிறுவனத்தின் வருவாய் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.  ஊழியர்கள் பணி நீக்க முடிவால் இந்தியாவை சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய ரவிக்குமார், இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் படிக்க

  • நெருங்கும் நீட் தேர்வு...வெளியானது ஹால் டிக்கெட்...

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.   499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.  இத்தேர்வுக்கு மொத்தமாக 20,87,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget