National Headlines: ராகுல் காந்தி விமர்சனம்.. தண்டவாளத்தில் காதல் கவிதைகள்.. இந்தியாவின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- Rahul Gandhi On BJP: ”கேட்டு பாருங்களேன், மாத்தி விட்ருவாங்க.. கதை சொல்லும் பாஜக” - ராகுல் காந்தி விமர்சனம்
பாஜக தலைமையிலான மத்திய அரசு எதற்குமே பொறுப்பேற்காமல் பிறரை மட்டுமே காரணம் காட்டுவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். யதார்தத்தை ஏற்காத மத்திய அரசு சாக்குப்போக்குகளை கூறுவதையே சித்தாந்தமாக கொண்டுள்ளதாக ராகுல் காந்தி சாடினார். மேலும் படிக்க
- Crime: 'அடங்காத சாதிவெறி'.. அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக இளைஞர் படுகொலை - பகீர் பின்னணி..!
மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது போந்தர் ஹவேலி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் அக்ஷய் பலேராவ். அவருக்கு வயது 24. இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை அவர் வசிக்கும் பகுதியில் கொண்டாடியுள்ளார். அம்பேத்கரின் பிறந்தநாளை அக்ஷய் கொண்டாடியது அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க
- Odisha Train Accident: தண்டவாளத்தில் காதல் கவிதைகள்.. பதைபதைக்க வைத்த காட்சிகள்..ரயில் பெட்டிகளுடன் நொறுங்கிய கனவுகள்
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநகா பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், பயணிகள் ரயில் உட்ப்ட 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலரது உடல் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம், உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த நூற்றாண்டின் மோசமான ரயில் விபத்து பலரது வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோரின் கனவுகளை நொடிப்பொழுதில் வெறும் கனவுகளாகவே மாற்றி விட்டது. அந்த கனவுகளில் பலரது காதலும் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக தான், சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மனதை ரணமாக்கும் விதமாக அமைந்துள்ளன. மேலும் படிக்க
- Odisha Train Accident: 275 பேர் உயிரை பறித்த கோர விபத்து..51 மணி நேர போராட்டம்.. பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலரது உடல் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம், உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் படிக்க
- மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்.. ‘இப்படித்தான் மோடியும் சொன்னார்’ : மோடியை சாடிய கபில் சிபல்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜிபூஷன் சிங் சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். ஷாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகிய வீராங்கனைகளுக்கு பஜ்ரங் புனியா என்ற வீரர் துணையாக களத்தில் போராடி வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் பூஷண் சிங், என் மீதான ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபித்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை சுட்டிக்காட்டியுள்ள மாநிலங்களவை சுயேட்சை எம்.பி. கபில் சிபல், மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் தற்கொலை செய்து கொள்வதாக பிரிஜ் பூஷண் சிங் கூறுகிறார். இதனால் யாருக்கும் என்ன லாபம்? மேலும் படிக்க