9 AM National Headlines: கேதர்நாத் யாத்திரை பதிவு நிறுத்தம்..செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் கைது..இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000.. இலவச பேருந்து பயணம்.. தேர்தல் அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ்..
கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் , முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட பல திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளது. மேலும் படிக்க
-
தேசியவாத காங்., தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார். இதனால் அவரது மகள் சுப்ரியா சுலே அல்லது மருமகன் அஜித் பவார் கட்சியின் தலைவராக வாய்ப்புள்ளது. 82 வயதாகும் சரத்பவார், 4 முறை மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன், அரசியல், சமூக பணிகளில் ஈடுபடுவேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
-
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் வழக்கு - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
மோடி என்ற பெயர் தொடர்பாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு பின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
மோசமான வானிலை: இன்று கேதார்நாத் புனித யாத்திரை பதிவு நிறுத்தம்
மோசமான வானிலை காரணமாக உத்தரகண்ட் அரசு கேதர்நாத் புனித யாத்திரைக்கான பதிவு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மூச்சுப் பிரச்சனைகள் உள்ள யாத்ரீகர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மோசமான வானிலை காரணமாக மே 3 வரை யாத்திரிகர்கள் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது என உத்தரகண்ட் போலீஸ் டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
ஆந்திராவில் செம்மரம் கடத்தல்... 13 தமிழர்கள் உட்பட 16 பேர் கைது
ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர காவலர்கள் நடத்திய தேடுதலில், செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் 4 கார்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க அரசு பல்வேறு ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க