(Source: ECI/ABP News/ABP Majha)
9 AM National Headlines: சுடச்சுட..! காலை 9 மணி தேசிய தலைப்புச்செய்திகள்..! நடந்தது என்னென்ன?
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- 5 முறை பஞ்சாப் முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் மரணம்.. அதிர்ச்சியில் மக்கள்..
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/former-punjab-cm-parkash-singh-badal-died-at-private-hospital-in-mohali-113744
- அவதூறு வழக்கு...குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி...தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா?
அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ராகுல் காந்தி. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/rahul-gandhi-goes-to-gujarat-high-court-after-no-relief-in-defamation-case-know-more-details-113723
- இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து; தேர்தலுக்கு முதல் நாள் வரை அமல்படுத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி..!
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9ஆம் தேதி வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/issue-of-reservation-cancellation-for-muslims-karnataka-supreme-court-has-interim-stay-113614
- ஆபரேஷன் காவேரி...சூடானில் சிக்கி தவிக்கும் இந்திர்களை காப்பாற்ற களத்தில் இறங்கிய இந்தியா..!
கலவரத்தால் சிக்கி தவிக்கும் சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/world/operation-kaveri-evacuation-mission-sudan-crisis-first-batch-of-indians-leaves-sudan-ins-sumedha-113683
- மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.. வந்தே பாரத் சேவையை துவக்கிவைத்த பிரதமர் பேச்சு..
திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/vande-bharat-express-prime-minister-thiruvananthapuram-kerala-kasargod-113707
- மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு...
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான மனுவை ஏற்று விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/harassment-allegations-supreme-court-india-wrestling-federation-judge-chandra-suit-113502
- அம்மாடியோவ்..! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை சீரமைக்க ரூபாய் 45 கோடியா..?
டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்காக சுமார் ரூபாய் 45 கோடி செலவிட்டதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/the-bjp-has-alleged-that-around-45-crore-was-spent-on-the-renovation-of-delhi-chief-minister-arvind-kejriwal-s-official-residence-in-delhi-s-civil-lines-area-113766
- சிக்குகிறாரா மணீஷ் சிசோடியா? கழுத்தை நெரிக்கும் டெல்லி மதுபான கொள்கை வழக்கு...பரபரப்பை ஏற்படுத்திய குற்றப்பத்திரிகை..!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/delhi-liquor-policy-case-cbi-files-chargesheet-against-manish-sisodia-excise-policy-case-113689