மேலும் அறிய

Rahul Gandhi Appeal : அவதூறு வழக்கு...குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி...தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா?

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ராகுல் காந்தி.

அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில்  
மேல்முறையீடு செய்துள்ளார் ராகுல் காந்தி.

அப்படி ராகுல் காந்தி என்னதான் பேசினார்?

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை நிறுத்த வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ராகுல் காந்தியால் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.

தொடர் பின்னடைவு:

அவதூறு வழக்கில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ராகுல் காந்தி, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். சூரத் நீதிமன்றத்தை தொடர்ந்து, பாட்னா நீதிமன்றத்திலும் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

மோடியின் பெயர் தொடர்பான அதே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தற்போது, அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் நீதிபதி சந்தீப் குமார் முன் குறிப்பிடப்பட்டது. ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை ஏப்ரல் 24ஆம் தேதி விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

அதன்படி, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் ராகுல் காந்தி சமீபத்தில் ஒப்படைத்தார். அரசு பங்களாவை காலி செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்துஸ்தானை சேர்ந்த மக்கள் 19 ஆண்டுகளாக இந்த வீட்டை எனக்கு கொடுத்தார்கள்.

அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையைப் பேசுவதற்கான விலை இது. உண்மையை பேசுவதற்கு எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Pakistan PM Shehbaz Sharif: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோAravind kejriwal Lost : மண்ணைக் கவ்விய கெஜ்ரிவால்! சாதித்து காட்டிய மோடி! தலைநகரை கைப்பற்றிய பாஜகStory of Parvesh Verma BJP | கெஜ்ரிவாலுக்கு தண்ணி காட்டியவர்.. டெல்லியின் முதல்வராகும் பர்வேஷ் சிங்?Manapparai School Issue | குழந்தைக்கு பாலியல் தொல்லைஅதிரடி காட்டிய போலீஸ் மணப்பாறை பள்ளியில் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Pakistan PM Shehbaz Sharif: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Erode Election Result LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்
Erode Election Result LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்
ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது -  எம்பி மாணிக்கம் தாகூர்
ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது - எம்பி மாணிக்கம் தாகூர்
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Parvesh verma: கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய பர்வேஷ் வர்மாவின் சொத்து இத்தனை கோடியா?
Parvesh verma: கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய பர்வேஷ் வர்மாவின் சொத்து இத்தனை கோடியா?
Embed widget