Morning Headlines: இஸ்ரேலை ஆதரிக்கும் கங்கனா .. கனடா மக்களுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ’மனதை உலுக்குகிறது’ – இஸ்ரேலை ஆதரிக்கும் நடிகை கங்கனா ரனாவத்..
கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாகக் கூறி, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலகளவில் பெரும் பிரச்னையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் படிக்க..
- ’வரலாற்று சிறப்புமிக்க நாள்’ – ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ரெடியான பிரதமர் மோடி..
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் ராமர் கோயில் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- கனடா மக்களுக்கு மீண்டும் விசா தரத் தொடங்கிய இந்தியா.. உறவில் முன்னேற்றம் ஏற்படுமா?
கனட மக்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விசா வழங்கவதை இந்தியா தொடங்கியுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..
- ஒரே நாடு ஒரே தேர்தல் – அரசியல் கட்சிகள் என்ன சொல்லப்போகிறது.. உயர்மட்ட குழு எடுத்த முடிவு..
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுகிறது. நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு, உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. மேலும் படிக்க..
- ஐநாவில் காசா தொடர்பான விவாதம்.. காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்.. கடுப்பான இந்தியா..
பாலஸ்தீன காசா பகுதியில் ஆட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாகக் கூறி, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க..
- ஆந்திராவில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற தடியடி திருவிழா.. 2 பேர் உயிரிழப்பு..
ஆந்திர மாநிலம் தேவர்கட் மலையில் விஜயதசமியை முன்னிட்டு மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற தடியடி திருவிழாபில் 2 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் முதல் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி பண்டிகை நேற்று முடிவுக்கு வந்தது. நவராத்திரி பண்டிகை என்பது 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். மேலும் படிக்க..