National Headlines: ”தமிழ் ஒவ்வொரு இந்தியனின் மொழி” .. ஓய்ந்தது வெப்ப அலை..இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் இதோ..
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- PM Modi: 'தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி’ .. இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நெகிழ்ச்சி பேச்சு...!
அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்குச் சென்ற பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். தொடர்ந்து, மூவரும் செய்தியாளர்களிடமும் பேசினர். மேலும் படிக்க
- Southwest Monsoon: இந்தியாவில் ஓய்ந்தது வெப்ப அலை.. இன்னும் இரண்டே நாட்களில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்
நடப்பாண்டும் கடுமையாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெயில் வாட்டி வதைத்தது. தமிழ்நாட்டிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிலவி வருகிறது. இதனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம். நீர்ச்சத்து மிக்க ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசும் வேண்டுகோள் விடுத்தது. மேலும் படிக்க
- Crime: 3 குழந்தைகள் கொலை.. 2-வது கணவருடன் பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செறுபுழா பகுதியின் நகுடி என்ற ஏரியாவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. 38 வயதான இவருக்கு திருமணமாகி சூரஜ், சுபின், சுரபி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவர் சுனில் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீஜா கணவரை ஒரே வீட்டில் தனி அறையில் தனது 3 குழந்தைகளுடன் வசிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் செறுபுழாவைச் சேர்ந்த் 40 வயதான ஷாஜி என்பவர் ஸ்ரீஜாவுக்கு அறிமுகமானார். மேலும் படிக்க
- LIC Net Profit: மக்களே... எல்.ஐ.சி.யின் லாபம் 5 மடங்கு உயர்வு..! மார்ச் மாத நிதிநிலை அறிக்கையில் தகவல்..!
நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.-யின் The Life Insurance Corporation (LIC) நிகர லாபம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லைப் இன்சுரன்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மார்ச் 2023 காலாண்டு நிகர லாபம் ரூ.13,428 கோடியாக உயர்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Sengol: இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்த செங்கோல் தெரியுமா? அமித்ஷா தெரிவித்தது என்ன?
டெல்லியில் 64 ஆயிரத்து 500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. வரும் 28ம் தேதியன்று பிரதமர் மோடி இந்த கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். அப்போது, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும்போது நேருவிடம் ஆங்கிலேயர்கள் கொடுத்த செங்கோலை, பிரதமர் மோடி புதிய கட்டடத்தில் வைப்பார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க