Morning Headlines: பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. தீபாவளி பரிசாக சிலிண்டர்.. இன்றைய முக்கிய செய்திகள்..!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
-
பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் .. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி..
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தார். அவரது பணி தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என கூறியுள்ளார். மேலும் படிக்க
-
"அமேதியில் ராகுல் காந்தியின் தோல்விக்கு இதுவே காரணம்" கடுப்பான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
அமேதியில் ராகுல் காந்தியின் தோல்விக்கு அவரது ஆணவமே காரணம் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியின் அரசியல் எஜமானராக அவர் இருக்கிறார். நான் பாஜகவின் கடைநிலை தொண்டன். அரசியல் எஜமானராக இருப்பதற்கும் தொண்டனாக இருப்பதற்கும் மிகப்பெரிய அரசியல் வேறுபாடு உள்ளது. மேலும் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது, அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாகும் எனவும் கூறியுள்ளார். மேலும் படிக்க
- மோசமாகி வரும் நிலைமை.. பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி - நடந்தது என்ன?
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடந்தி வரும் தாக்குதல் உலக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை நாங்கள் தொடர்ந்து அனுப்புவோம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் படிக்க
- "பாஜக ஆட்சிக்கு வந்தால்.." நக்சல்களுக்கு தேதி குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷா
சத்தீஸ்கரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி, முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நக்சல்களுக்கு காங்கிரஸ் ஊக்கம் அளித்து வருவதாகவும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நக்சல்களிடம் இருந்து சத்தீஸ்கர் விடுவிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- தீபாவளி பரிசாக ஒரு சிலிண்டர் இலவசம் - மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த உ.பி. முதலமைச்சர்!
நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. மக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இப்படியான நிலையில் உத்தரபிரதேசத்தில் தீபாவளி பரிசாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கு ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க