அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்!
பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்து, அவரது தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற தந்தை, மகனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தந்தை, மகன் சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்து, அவரது தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக குற்றச்செயல்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, தனிப்பட்ட பகை காரணமாக நடக்கும் கொடூரமான கொலை சம்பவங்கள் மனதை உலுக்கும் வகையில் இருக்கின்றன. அம்மாதிரியான ஒரு சம்பவம்தான், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்துள்ளது.
தந்தை மகன் வெறிச்செயல்:
தந்தை, மகன் இருவர் சேர்ந்து தங்கள் அண்டை வீட்டாரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், வெட்டப்பட்ட தலையுடன் உள்ளூர் காவல்துறைக்கு சென்று அவர்கள் சரண் அடைந்துள்ளனர். திண்டோரி தாலுகாவின் நானாஷி கிராமத்தில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்து அவரது மகனை காவலில் வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "சுரேஷ் போக் (40) மற்றும் அவரது மகன் ஆகியோர் தங்கள் பக்கத்து வீட்டுக்காரரான குலாப் ராம்சந்திர வாக்மரே (35) என்பவரை கோடாரி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
சம்பவத்திற்குப் பிறகு, வெட்டப்பட்ட குலாப்பின் தலை, அவரைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நானாஷி அவுட்போஸ்ட் போலீஸ் சௌகியில் சரண் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், குற்றம் சாட்டப்பட்ட தந்தை-மகன் இருவரின் வீட்டையும் சேதப்படுத்தியதுடன், அவர்களது காரையும் எரித்தனர்" என்றார்கள்.
மகாராஷ்டிராவில் பரபரப்பு:
இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கிராமத்தில் உள்ளூர் போலீசாருடன், அருகிலுள்ள காவல் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படை (எஸ்ஆர்பிஎஃப்) பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
சுரேஷ் போக்கும் குலாப்பும் அண்டை வீட்டார் என்பதால், இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி, அவர்கள் ஒருவருக்கொருவர் போலீசில் புகார் அளித்தனர். அடுத்த நாள், சுரேஷ் போக்கின் மகளை வீட்டை வீட்டு ஓடி செல்ல குலாப் உதவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குலாப்பை சுரேஷ் போக் தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: Maruti Suzuki Sales: ஆத்தி..! ஒரே மாதத்தில் 30,000 யூனிட்களா? விற்பனையில் இதுவரை இல்லாத உச்சம், எந்த மாருதி கார் தெரியுமா?