Free LPG cylinder: தீபாவளி பரிசாக ஒரு சிலிண்டர் இலவசம் - மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த உ.பி. முதலமைச்சர்!
உத்தரபிரதேசத்தில் தீபாவளி பரிசாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கு ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. மக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இலவச சிலிண்டர்:
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பரிசாக உத்தரபிரதேச மக்களுக்கு யோகி ஆதித்யநாத் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில மக்களுக்கு ஒரு எல்.பி.ஜி. சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில் உள்ள 1.75 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிபபு வெளியிட்டுள்ளார். புலந்த்ஷாஹ்ரில் நடைபெற்ற 632 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்த அறிவிப்பை யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.
புதிய இந்தியா:
அந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “ உஜ்வால் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் தீபாவளி பரிசாக எல்.பி.ஜி. சிலிண்டர் ஒன்று இலவசமாக வழங்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், ஹர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ரூபாய் 136 கோடி ரூபாய் மதிப்பிலான 132 திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “ பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தினால் 55 லட்சம் பெண்கள் சொந்த வீட்டின் உரிமையாளர்களாக உள்ளனர்.சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 2.75 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாம் அனைவரும் ஒரு புதிய இந்தியாவை கண்டுள்ளோம். இந்த புதிய இந்தியா வளமானது, சக்தி வாய்ந்தது மற்றும் தன்னம்பிக்கையானது.” இவ்வாறு அவர் பேசினார்.
அடுத்தாண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் மிகவும் முக்கியமான பங்கு வகித்து வருகிறது. நாட்டிலே அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் அதி தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும். இதனால், உத்தரபிரதேச மக்களின் மனதை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
மேலும் படிக்க: Rapidx Rail: வந்தே பாரத் மட்டுமில்ல! நாளை அறிமுகமாகும் ரேபிட் எக்ஸ் ரயில்...சிறப்பம்சங்கள் என்னென்ன?
மேலும் படிக்க: Morning Headlines: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்; அகவிலைப்படி உயர்வு - முக்கிய செய்திகள் இதோ!