Morning Headlines: ஆபரேஷன் அஜய் திட்டம் தொடக்கம்.. திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்.. இன்றைய முக்கிய செய்திகள்..!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- 'சண்டே சர்ச்சுக்கு போகணும்' மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை மாற்ற கோரிக்கை!
ராஜஸ்தானில் தேர்தல் தேதி மாற்றப்பட்டதை தொடர்ந்து மிசோரமிலும் வாக்கு எண்ணிக்கை நாளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அங்கு ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு, டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்குகளும் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினம் கிறிஸ்தவர்களின் புனிதமான நாள், தேவாலயங்களில் வழிபாடு நடைபெறும் என்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் படிக்க
- தொடங்கியது ஆபரேஷன் அஜய் திட்டம்! இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் மக்கள்!
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்கும் மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 212 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்துக்கு வருகை தந்த அவர்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராக உள்ள ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். அந்நாட்டில் 18 ஆயிரம் இந்திய மக்கள் உள்ள நிலையில் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
- காவிரி தண்ணீர் எங்கே?..அவசரமாக இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் - தமிழகத்திற்கு சாதகமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், இதுநாள் வரை கர்நாடக அரசு அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- உலகக் கோப்பை - ஹாட்ரிக் வெற்றி பெறுமா நியூசிலாந்து? சென்னையில் வங்கதேசத்துடன் மோதல்
ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டுகிறது. மேலும் படிக்க
- திருப்பதி பிரம்மோற்சவ விழா - இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்!
திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக நாளை (13/10/2023) முதல் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க