மேலும் அறிய

Tirupati Brahmotsavam 2023: திருப்பதி பிரம்மோற்சவ விழா.. தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

Tirupati Brahmotsavam 2023: திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் ன தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 13) முதல் அக்டோபர் 26 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

பிரம்மோற்சவம் - புராண கதை 

பிரம்மோற்சவம் விழாவிற்கு ஒரு கதை உண்டு. அதன்படி, புராணங்களில் உள்ள கதையை காணலாம்.  ஸ்ரீநிவாஸர் வெங்கடாத்ரி மலையில் தோன்றிய நாட்களில் பிரம்மாவை அழைத்து, உலக நலனுக்காக விழாக்களை நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, பிரம்மா ஆனந்த நிலையத்தின் நடுவில் ஸ்ரீவெங்கடேஸ்வரர் அவதரித்த ஸ்ரவண நட்சத்திரத்துடன் ஒன்பது நாட்கள் திருவிழாக்களை (பிரம்மோற்சவங்கள்) ஏற்பாடு செய்ததாகவும்,  அன்றிலிருந்து விழா தடையின்றி நடந்து வருவதாகவும் புராண கதைகளில் இருக்கின்றன.

 இரண்டு பிரம்மோற்சவ விழா

அதன்படி, இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம். செப்டம்பர், அக்டோபர் மாதம் ஒரு முறையும் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலை திருப்பதியில் ஆண்டும் முழுவதும் நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். உலகம்  முழுவதிலும் இருந்து பெருமாள் பக்தர்கள் இந்த விழா நாட்களில் வந்து தவிப்பர். மூன்று ஆண்டு ஒரு முறை  இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். அந்தவகையில்  இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது ஸ்ரீ வாரி பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதமும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் மாதமும் நடைபெறுகிறது.

சிறப்பு பேருந்துகள் 

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்த வருடம் திருப்பதி திருமலையில் இரண்டு முறை பிரம்மோத்சவம் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி  ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக இன்று (13/10/2023) முதல் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in , டி.என்.எஸ்.டி.சி. செயலி மூலம் முன்பதிவு செய்து” பயன்பெறுமாறு எஸ்.இ.டி.சி தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திருப்பதி லட்டு - 308 ஆண்டுகால வரலாறு

1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2- ஆம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், 1803 ஆம் ஆண்டிலிருந்துகோயிலில் லட்டு விற்பனை செய்யப்படும் நடைமுறை தொடங்கியது. 308 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியே ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. விஷேச நாட்களில் 750 கிராம்  எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. iது பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது கல்யாணோத்வ லட்டு தயாரிக்கப்படும். இது அளவில் சற்று பெரியதாக இருக்கும். கோயில் உற்சவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதோடு, 175 கிராம் எடை கொண்ட புரோக்தம் லட்டு பக்தர்களுக்கு கட்டணமின்றி (ஒரு லட்டு) வழங்கப்படுவதாகும். இப்படி பல வகைகளில் லட்டு வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்று கொண்டு லட்டு வாங்கலாம். பணம் செலுத்தி கூடுதல் லட்டு பெற்று கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
தம்பி விஜய் மீதான பாசம் குறையவில்லை; ஆனால் அவர் இதை செய்ய வேண்டும்: சீமான் அந்தர் பல்டி
தம்பி விஜய் மீதான பாசம் குறையவில்லை; ஆனால் அவர் இதை செய்ய வேண்டும்: சீமான் அந்தர் பல்டி
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
Embed widget