Morning Headlines 12th June: கட்சி தொடங்கும் சச்சின் பைலட்? வீராங்கனைகளிடம் ஆதாரம் கேட்ட போலீஸ்.. இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள்..!
Morning Headlines 12th June 2023: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. வர்காரியா சமூகத்தினர் மீது லத்தி சார்ஜ்.. நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் விட்டலை கடவுளாக பாவித்து வழிபடுபவர்கள் வர்காரிய சமூகத்தினர் என குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் பந்தர்பூருக்கு வரி எனப்படும் வருடாந்திர ஆஷாதி ஏகாதசி யாத்திரையின் மேற்கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புனே நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலந்தி நகரில் உள்ள புனிதர் ஞானேஸ்வர் மகாராஜ் நினைவிடத்தில், சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். மேலும் படிக்க
- 'அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுவேன்..' பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ்பூஷன்சிங் அறிவிப்பு
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான வழக்கின் விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இருப்பினும், பிரிஜ் பூஷன்சிங் ஏன் கைது செய்யப்படவில்லை என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க
- டெல்லியில் சர்வாதிகாரம்.. ஆளுநருக்கே உச்சபட்ச அதிகாரம் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் உச்சகட்ட அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த பிரச்னை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது. மேலும் படிக்க
- 'உண்மையான அரசியல் தேவை' விரைவில் புதிய கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்..? என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?
முதலமைச்சர் பதவியைதான் சச்சின் பைலட் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கெலாட்டுக்கு இருந்ததால், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையே தொடர் அதிகார போட்டி நிலவி வந்தது.
இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு, கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்ற நிலையில், டெல்லி தலைமையின் தலையீட்டின் காரணமாக ஒரு மாதம் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்னர், துணை முதலமைச்சர் மற்றும் மாநில தலைவர் பதவியில் இருந்து பைலட் நீக்கப்பட்டார். மேலும் படிக்க
- மல்யுத்த வீராங்கனைகளிடம் ஆதாரம் கேட்ட காவல்துறை.. பா.ஜ.க. எம்பியை காப்பாற்றும் முயற்சியா..? நடப்பது என்ன?
காவல்துறை அதிகாரிகளும் தாங்களாகவே ஆதாரங்களைச் சேகரிக்க முயன்று வருகின்றனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 91இன்படி, காவல்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பான எந்த ஆவணத்தையும் கேட்டு பெற்றும் கொள்ளும் அதிகாரத்தை விசாரணை அதிகாரிக்கு இந்த சட்டம் வழங்குகிறது.
இதனிடையே, காவல்துறை விசாரணை மீது மல்யுத்த வீராங்கனைகள் நம்பிக்கை வைக்கவில்லை என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பாஜக எம்பியை காப்பாற்றும் முயற்சி நடந்துள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியில் இருப்பது விசாரணைக்கு இடையூறாக உள்ளது" என்றார். மேலும் படிக்க