Top 10 News Headlines: பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்! ”துரோகம்” பிரதமர் மோடி வேதனை - டாப் 10 செய்திகள்
Top 10 News: காலை முதல் தற்போது வரை இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

துரோகம் தான் கிடைத்தது
பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பலதடவை முயற்சி எடுத்துள்ளேன்; ஆனால், நாங்கள் எடுத்த ஒவ்வொரு உன்னதமான முயற்சிக்கும் துரோகமும், பகையுமே பதிலாக கிடைத்தன.இருதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும் என்ற ஞானம், பாகிஸ்தான் தலைமைக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறோம்.
வீட்டுக்காவலில் பாஜக நிர்வாகிகள்
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைக்கும் காவல் துறையினர். சென்னையில் வினோஜ் பி.செல்வம் கைது; தி.நகரில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வீட்டின் முன்பு காவலர்கள் குவிப்பு. இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜகவினர் திட்டம்.
திடீரென போராட்டம் நடத்துவோம்
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில் இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்; பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளை திமுக அரசு வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஒருநாள், போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பூமிக்கு திரும்பும் சுனிதா
சுனிதா வில்லியம்ஸ் நாளை மறுநாள் மாலை 3:27 மணிக்கு பூமி திரும்புவார்; எதிர்பார்த்ததைவிட ஒரு நாளுக்கு முன்னதாக பூமிக்கு திரும்ப உள்ளார்கனிதா மற்றும் வில்மோருடன், நாசா விண்வெளி வீரர் திக்ல் ஹேம். ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் Spacek Crew Dragon விண்கலத்தில் இணைந்து பூமிக்கு திரும்புகிறார்கள்; ப்ளோரிடா பாலைவனத்தில் விண்கலம் தரையிறங்க உள்ளது என நாசா அறிவிப்பு
புலியை பிடிக்க கூண்டு
கேரளாவில் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் பகுதியில் காயத்துடன் சுற்றித் திரியும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு. இதற்காக 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. புலி பிடிபட்டவுடன் அதற்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளது வனத்துறை.
போப் படம் வெளியீடு:
கடந்த பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது வாடிகன் நிர்வாகம்.ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதிரியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறி நாய் கடித்தால் உடனே தடுப்பூசி
வெறிநாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்; அந்த காயத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்களுக்கு கழுவ வேண்டும் நாய் கடித்ததில் இருந்து 28 நாட்களுக்குள் 4 தடுப்பூசிகளை போட வேண்டும்; ரேபிஸ் மற்றும் இம்யூனோகுளோபின் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜனை கைது
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது. போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்தது காவல்துறை; "போராட்டத்துக்கு போக வேண்டும், எங்களை விடுங்கள்" என கூறியிருந்தார் தமிழிசை சௌந்தரராஜன்.
கூல் கேப்டன் தான் ஆனால்..
"2019ல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மைதானத்திற்குள் சென்று NO பாலிற்காக வாதிட்டது நான் செய்த மிகப் பெரிய தவறு. அச்சமயத்தில் எனது அமைதியான மனநிலையை இழந்துவிட்டேன்!" என எம்.எஸ் தோனி ஒரு நேர்காணலின் போது தெரிவித்தார்.
சச்சின் அணி சாம்பியன்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது இந்திய அணி! இந்தப் போட்டியில் 74 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட ராயுடு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
‘
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

