மேலும் அறிய

EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்

EPS Slams MK Stalin: முதல்வர் ஸ்டாலினின் வீடியோவுக்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக பட்ஜெட்டும் தமிழும் ஹிட் என்று பேசிய நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 

முதல்வர் பேசியது என்ன?

'உங்களில் ஒருவன்' கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  "ஒன்றுமில்லை. பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக் கொள்கையில் நாம் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவதற்கு அதில் 'ரூ' என்று வைத்திருந்தோம்.

அவ்வளவுதான். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள் அதைப் பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள். ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான சம்பளத்தைத் தாருங்கள் - பேரிடர் நிதி தாருங்கள் - பள்ளிக்கல்வி நிதியை விடுவியுங்கள் என்று தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்கை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

அவரே பல பதிவுகளில் என்றுதான் போட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்திலும் அனைவரும் Rupees-அ சிம்பிளா Rs. என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாகத் தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல, மொத்தத்தில், இந்திய அளவில் நம்முடைய பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்!" என்று பேசியிருந்தார்.

ஈபிஎஸ் விமர்சனம்: 

முதல்வர் ஸ்டாலினின் வீடியோவுக்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், "FAILURE மாடல்அரசின் விளம்பர மாடல்” திரு. முக ஸ்டாலின். உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.

தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா? உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே , மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தான்!

தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், "ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்! பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை.

5 பட்ஜெட்டுமே UTTER FLOP:

அப்படி பார்த்தால், திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்! 72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் தான்! இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் "தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்" என்பது மக்களின் கருத்து . இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE..! என்று எடப்பாடி பழனிச்சாமி அந்த பதிவில் விமர்சனம் செய்துள்ளார். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
டாடா கர்வ், ஹரியர் ஜாம்பவான்களுக்கு நடுவே களமிறங்கும் சியாரா; வித்தியாசம் என்ன.?
டாடா கர்வ், ஹரியர் ஜாம்பவான்களுக்கு நடுவே களமிறங்கும் சியாரா; வித்தியாசம் என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பீகார் மாடல் கைகொடுக்குமா? பாமக, தவெக-க்கு அழைப்பு பாஜகவின் MASTERPLAN | ADMK | BJP | NDA Alliance
CM CHAIR உங்களுக்கு..மத்ததெல்லாம் எங்களுக்கு நிதிஷிடம் பாஜக டீலிங் | Nitish Kumar | Bihar Goverment
”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
டாடா கர்வ், ஹரியர் ஜாம்பவான்களுக்கு நடுவே களமிறங்கும் சியாரா; வித்தியாசம் என்ன.?
டாடா கர்வ், ஹரியர் ஜாம்பவான்களுக்கு நடுவே களமிறங்கும் சியாரா; வித்தியாசம் என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
Embed widget