மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: பி.எப் . வட்டி சதவீதம் குறைப்பு.. பெங்களூர் அணிக்கு புது கேப்டன்.. முக்கியச் செய்திகள்!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சாதி, மத மோதலை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
- ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் 4 டாக்டர்கள் ஆஜராக சம்மன்
- திமுக பிரமுகரை தாக்கியது உள்ளிட்ட 3 வழக்குகளில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்; சிறையில் இருந்து வெளியே வந்தார்.
- தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகப்படுத்தி பசுமை சூழலை உருவாகுவது வருங்கால தலைமுறைக்கு அத்தியாவசியமாகும் : முதலமைச்சர் முக ஸ்டாலின்
- சென்னை திருவொற்றியூர், விம்கோ நகர் நிலையங்களில் மார்ச் 13 முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குமென அறிவிப்பு
- உக்ரைன் நாட்டில் இருந்து பாதுகாப்பாக தமிழக மாணவர்களை அழைத்து வந்த மத்திய அரசுக்கு நன்றி - முதலமைச்சர் முக ஸ்டாலின்
இந்தியா :
- பேச்சுவார்த்தையின்போது எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பை நிலைநிறுத்த இந்திய - சீன தரப்பு ஒப்புதல்
- 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று மாலை கூடுகிறது.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப் மீதான வட்டி சதவீதம் 8. 50 லிருந்து 8. 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- நீட் முதுநிலைத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
உலகம் :
- உக்ரைன் நாட்டில் ரஷ்யாவை எதிர்த்து போரிடும் திட்டமில்லை. நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் உலகப்போர் மூன்றாகதான் இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் போரை ஒருநாளும் விரும்பவில்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
விளையாட்டு :
- ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பாப் டுப்ளிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அறிமுகம் செய்துள்ளது.
- இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
- வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது.
- பெங்களூரில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion