ஆட்கொல்லிப் புலியைக் கொல்ல உத்தரவு... அதிகனமழை எச்சரிக்கை... இன்று இதெல்லாம் டாப் நியூஸ்!
இன்றைய நாளில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள் சில
1.மசினகுடி அருகே 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.இந்தியாவின் அனைத்து நகரங்களையும் 'குப்பை இல்லா' மற்றும் 'நீர் பாதுகாப்பான' நகரங்களாக மாற்றும் தூய்மை இந்தியா திட்டம் 2.0யை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
3.கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க 39 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4.புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளுக்கு சந்தீப் ராய் ரத்தோர், எம்.ரவி ஆகிய புதிய காவல்துறை ஆணையர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
5.ஊரக உள்ளாட்சித்தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
6.நீதிபதியை பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் காணொலி காட்சி மூலம் ஆஜாரான உள்துறை செயலாளர் நடைபெற்ற நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்தார்.
7.செப்டம்பரில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 10 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8.டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவித்த நிலையில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்
9.பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
10.ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
11.அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா உட்பட சில மாவட்டங்களின் அதிகனமழை பெய்யும், நாமக்கல், கரூர், ஈரோட்டில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
12. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1597 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
13. புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே சொத்து பிரச்னை காரணமாக தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
14. தமிழகத்தில் வெள்ளி, சனி உட்பட அனைத்து நாட்களும் கோயில்களை திறக்கக்கோரி அக்டோபர் 7-ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.