மேலும் அறிய
Advertisement
Headlines Today, 7 Sep: உள்ளாட்சித் தேர்தல்.. கேரளாவை அச்சுறுத்தும் நிபா..இன்னும் சில முக்கியச் செய்திகள்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் – அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு – 4 ஊராட்சித் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
- பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் – சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு – ஆர்வமுடன் பதிவிறக்கம் செய்த மாணவர்கள்
- கேரளாவில் நிபா வைரசால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 11 நபர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறி
- கடைகளில் அமர்ந்து கொண்டே பணியாற்றுவதற்கான இருக்கை சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்
- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிடிபட்டவர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி என்று தனிப்படையினர் 5 மணி நேரம் விசாரணை
- தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
- வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வு – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
- ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம் – இணைய சேவையை முடக்கியது மாநில அரசு
- இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது
- இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
- ஓவல் மைதானத்தில் பெற்ற வெற்றி மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion