மேலும் அறிய
Advertisement
Today Headlines : உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு ஆலோசனை! ஹாக்கியில் வெண்கலம்.! முக்கியச் செய்திகள் சில!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்த மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- தி.மு.க.வுடன் இடப்பங்கீடு குறித்து காங்கிரஸ், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர்கள் நேரில் பேச்சுவார்த்தை
- உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. கட்சித் தலைமை ஆலோசனை
- உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டி என்பது அவசியமற்றது
- உள்ளாட்சித் தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் – பொன்.ராதாகிருஷ்ணன்
- தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரிய வழக்கின் சிறப்பு தீர்ப்பு ஒத்திவைப்பு
- மதத்தின் பெயரில் பகைமையை வளர்த்தால் கடும் நடவடிக்கை : சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால்
- தமிழ்நாட்டில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது
- மதம்மாற்ற குற்றச்சாட்டு விவகாரத்தில் பா.ஜ.க. இளைஞரணித் தலைவர் வினோத் மீது வழக்குப்பதிவு
- கைப்பேசிய செயலி மூலம் மின் கணக்கீடு - சோதனை முறையில் இன்று முதல் தமிழ்நாட்டில் அமல்
இந்தியா :
- நாட்டின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையைச் சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமனம்
- டெல்லியில் என்.சி.சி. மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் சாகசம் – பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்
உலகம் :
- கொரோனா வைரசின் அடுத்த உருமாற்றம் மிகவும் கொடியதாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
- அமெரிக்காவில் மிகப்பெரிய பாலம் மூன்றாக உடைந்து விபத்து – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு
- உக்ரைன் விவகாரம் : ரஷ்ய அதிபரிடம் பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை
- ரஷ்யாவின் கோரிக்கைகளை பிரான்ஸ் அரசு ஏற்காததால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகரிப்பு
விளையாட்டு ;
- மகளிர் ஆசியகோப்பை ஹாக்கி : சீனாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா
- மகளிர் ஆசியகோப்பை ஹாக்கி : தங்கம் வென்ற ஜப்பான் : வெள்ளி வென்ற தென்கொரியா
- ஒடிசா ஓபன் டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் தமிழக மாணவி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion