மேலும் அறிய
Advertisement
Headlines Today : உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் இல்லை... அடுத்த 5 நாட்களுக்கு மழை.. பதவி விலகிய சபாநாயகர்... இன்னும் பல!
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- விமர்சனம் என்ற பெயரில் தமிழக வளர்ச்சியை தடுக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டேன் : முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
- ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது : காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5 % ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம்
- தமிழகத்தில் இன்று துவங்க இருந்த பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு : அமைச்சர் பொன்முடி தகவல்
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
- தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- கொரோனா காலத்திற்குப் பின் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவு குறைந்துள்ளது : மகளிர் ஆணைய தலைவர் தகவல்
இந்தியா :
- குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் : மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
- பீகார் சட்டபேரவை சபாநாயகர் வி.கே.சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி : ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் செல்கின்றனர்.
- திருநங்கைகளுக்கான சுகாதார திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது.
- ஜூலை மாதத்திற்கான தண்ணீர் நாயகர்கள் போட்டி : சென்னை பெண் உள்பட 6 பேருக்கு விருது அறிவிப்பு
உலகம் :
- உலகின் அதிநவீன ரோபோக்களில் ஒன்றான அமேக்கா, பல்வேறு முகபாவனைகளை வெளிப்படுத்தும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
- ரசாயன தாக்குதல் மற்றும் டிரோன் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக தென்கொரிய ராணுவத்தினர் ஒத்திகை
- கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் திருடப்பட்ட 6 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
விளையாட்டு :
View this post on Instagram
- ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமனம்
- நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு : கேப்டனமாக பிரியங்க் பஞ்சல் நியமனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion