மேலும் அறிய
Advertisement
Today Headlines : புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...! சென்னையில் வடியாத வெள்ளம்..! - இன்றைய முக்கியச் செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
இந்தியா
- கொரோனா வைரஸை அடுத்தடுத்து இப்போது புதிய வகை நோரோ வைரஸ், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள 13 மாணவர்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
- டெல்லியில் காற்று மாசை தடுக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு டெல்லி அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது
- போதைப் பொருள் வழக்கில், ஜாமினில் வெளிவந்த ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானிடம் நேற்று போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்
தமிழ்நாடு
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
- புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை தொடரும் என்று கணிப்பு
- கனமழை பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ளது – தேசிய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
- கனமழை எச்சரிக்கை காரணமாக வரும் 16-ந் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டாம் – பேரிடர் மேலாண்மை ஆணையம்
- கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் வெள்ளம் – வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுககள் மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்
- கன்னியாகுமரியின் பழையாற்றின் வெள்ளத்தால் நாகர்கோவில்- நெல்லை இடையே போக்குவரத்து துண்டிப்பு
- பயிர்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்ககோரி மத்திய அமைச்சருக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்
- விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பயிர்காப்பீடு செய்யலாம் – வேளாண்துறை செயலாளர்
- கோவை மாவட்டத்தில் 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை – போக்சோ சட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது
- ரயில் சேவைகள் கொரோனாவிற்கு முந்தைய நிலையில் இயக்கப்படும் – ரயில்வே அறிவிப்பு
- மழையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
சென்னை
- சென்னையில் புளியந்தோப்பு, வேளச்சேரி, கொளத்தூர், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
- மழை நீருடன் புழல் ஏரியின் உபரிநீரும் கலந்ததால் மணலி சுற்றுப்பகுதி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது
- திருவள்ளூர் மாவட்டம் ஆரணியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்பு
- மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆய்வு
விளையாட்டு
- நியூசிலாந்து டெஸ்ட் தொடர் : ரஹானே தலைமையில் களமிறங்குகிறது இந்திய அணி – முன்னணி வீரர்களுக்கு ஓய்வு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion