மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களைச் சுற்றி நடந்தது இவைதான் - காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- திருப்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த வடமாநில தொழிலாளர் சடலம்; கொலை என பரவிய தகவலால் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிளாலர்கள்
- திருப்பூரில் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிபாளர் அலுவலகத்தில் தனிப் பிரிவு தொடக்கம்
- தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை. தலைமைச் செயலாளர் இறையன்பு அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் பங்கேற்பு
- தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேட்டி
- பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் தரப்புக்கு விளக்கம் அளிக்க மார்ச் 17ஆம் தேதி வரை கால அவகாசம்
- அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ள நம்பிக்கை துரோகி இபிஎஸ் என ஓபிஎஸ் ஆவேசம்
- குட்கா தடைச் சட்டத்தினை உயர்நீதிம்னறம் ரத்து செய்ததற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டின் மீது விசாராணை - இடைக்கால தடை விதிக்க மறுப்பு
- ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கேட்கும் இடங்களில் எல்லாம் பேராணி நடத்த அனுமதி வழங்கிட முடியாது- உளவுத்துறையின் அறிக்கையை புறம் தள்ளிவிட முடியாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்
- ஏ.சி வசதியுடன் கஞ்சா வளர்த்தியவர் உள்பட நான்கு பேர் கைது
- செங்கல்பட்டு அருகே கடத்தி வரப்பட்ட 27 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் - குழிதோண்டி அழிப்பு
- இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி கற்றனர் - ஆளுநர் ரவி
இந்தியா:
- மேகாலாயாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் முதலமைச்சர் கன்ரா சர்மா - மார்ச் 7ஆம் தேதி பிரதமர் முன்னிலையில் பதவியேற்பு செய்யவுள்ளதாக பேட்டி
- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மீது தெலுங்கான அரசு வழக்கு - 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதாக குற்றச்சாட்டு
உலகம்
- இந்தோனேஷியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து - 17 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
- நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்தப்படும் - அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே அறிவிப்பு
- ஜோபைடன் மார்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டது ஒரு வகையான புற்றுநோய் - தற்போது அது முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது என வெள்ளை மாளிகை அறிக்கை
விளையாட்டு
- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி
- இன்று தொடங்குகிறது மகளிர் பீரிமியர் லீக் - முதல் முறையாக தொடங்குகிறது என்பதால் வீராங்கானைகள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி
- இந்தூர் மைதனாம் மிகவும் மோசமான மைதானம் என ஐசிசி குற்றச்சாட்டு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion