News Headlines: அசாம் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் மரணம், தமிழ்நாட்டில் காவல்துறை உயரதிகாரிகள் பணியிடமாற்றம்... மேலும் சில முக்கிய செய்திகள்
News Headlines Today in Tamil: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய முக்கிய செய்திகள் சில...
Tamil News Headlines Today:
ஐபிஎல் 20-ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தமிழகத்தில் கூடுதலாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மின் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திட்டங்கள் பல வகுத்ததும்; போராட்டங்களின்றி உழவர்கள் இலவச மின்சாரம் பெற்றதும் கழக ஆட்சியில்தான்! சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறை மிளிரும்மின்சாரத்துறை என மாறிவருகிறது என்றும் தெரிவித்தார்.
அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று அமெரிக்காவில் சந்தித்தார். இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
அசாம் மாநிலம் தர்ரங் மாவட்டம் தோல்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்து 2 பேர் உயிரிழந்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக (TN Local Body Election) மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
தற்சார்பு இந்தியாவை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, காப்புரிமைகளுக்கான 80% கட்டண தளர்வு, கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விதிகளில் இது சம்பந்தமான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவர் A.V.வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், ரூ.13.5 லட்சம் பணம், இதுவரை சுமார் 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மாநிலத்தில் பத்து காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஆக ஜெயந்த் முரளி நியமனம். ஆயுதப்படை ஏடிஜிபி ஆக அபய்குமார் சிங் நியமனம்
வரும் ஞாயிற்றுக்கிழமை, 3-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம், 20,000 மையங்களில் நடைபெறவிருப்பதாகவும், அன்று 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார்.
மேலும், வாசிக்க:
10 IPS Officer Transfers | 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ; தமிழ்நாடு அரசு அதிரடி..
Assam Violence: ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல்... போர் களமான அசாம்!