IND vs ENG: ஏமாத்தி ஜெயிச்சதா இந்தியா? துபேவிற்கு பதில் ராணா! விதிகள் சொல்வது என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஷிவம் துபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
துபேவிற்கு பதில் ராணா:
நேற்று இந்திய அணி முதலில் பேட் செய்தபோது இந்திய அணிக்காக ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி பந்தில் தலையில் பந்து தாக்கிய காரணத்தால் அவர் இந்திய அணி ஃபீல்டிங் இறங்கவில்லை. பொதுவாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது ஒரு வீரருக்கு காயம்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் சப்ஸ்டியூட் வீரராக களமிறங்குவது வழக்கம்.
அவ்வாறு சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கும் வீரர் பேட்டிங் அல்லது பந்துவீச மாட்டார்கள். ஃபீல்டிங் மட்டுமே செய்வார்கள். இதுவே நாம் பெரும்பாலான போட்டிகளில் பார்த்திருப்போம். ஆனால், நேற்று ஷிவம் துபேவிற்கு பதிலாக களமறிங்கிய ஹர்ஷத் ராணா பந்துவீசினார். பந்து வீசியது மட்டுமின்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இது தற்போது பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விதிகள் சொல்வது என்ன?
சர்வதேச கிரிக்கெட் விதிப்படி, ஒரு வீரருக்கு இவ்வாறு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக இவ்வாறு முழுமையாக ஆட ஒரு வீரரை களமிறக்க அனுமதி உண்டா? என்றால் நிச்சயம் உண்டு. அப்படி இருக்கும்போது ஷிவம் துபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை இறக்கியது ஏன் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் உண்டாக்கியுள்ளது? என்ற கேள்வி எழலாம்.
ஒரு வீரர் காயம் ஏற்பட்டு விலகும்போது அவருக்கு பதிலாக அடுத்த இன்னிங்சில் முழுமையாக விளையாட அழைக்கப்படும் வீரர் கன்குசன் சப்ஸ்டியூட் என்று அழைககப்படுவார். அதாவது, ஒரு பேட்ஸ்மேன் காயம்பட்டு வெளியேறினால், அவருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரரும் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் காயம்பட்டு அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக ஒரு பந்துவீச்சாளரே களமிறங்க வேண்டும். ஒரு ஆல்ரவுண்டருக்கு பதில் மற்றொரு ஆல்ரவுண்டரே களமிறங்க வேண்டும்.
இந்திய அணி செய்தது சரியா? தவறா?
அதிரடி பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவிற்கு பதிலாக முழு நேர பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணாவை களமிறக்கியதே தற்போதைய இந்த விமர்சனத்திற்கு காரணம். சர்வதேச விதிகளுக்கு புறம்பாக ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒரு பந்துவீச்சாளரை களமிறக்கியதே தற்போது இந்த விமர்சனத்திற்கு காரணம் ஆகும்.
இந்திய அணியின் இந்த செயல்பாட்டை ஏமாற்று வேலை, மோசடி என்று இங்கிலாந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சனும் இந்திய அணியை விமர்சித்துள்ளனர். ஹர்ஷித் ராணாவிற்கு இந்த போட்டிதான் இந்திய அணிக்காக ஆடிய முதல் சர்வதேச டி20 போட்டி ஆகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

