News Today LIVE : தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1661 ஆக குறைந்தது
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
![News Today LIVE : தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1661 ஆக குறைந்தது News Today LIVE : தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1661 ஆக குறைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/256de75e4bcdee9b50bb560a7b37ba8f_original.jpg)
Background
Latest News in Tamil
நேற்று நடைபெற்ற 2-வது மெகா தடுப்பூசி முகாம்களில் 15 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தடுப்பூசி தற்போது கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இன்று தடுப்பூசி முகாம்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1661 ஆக குறைந்தது
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1697இல் இருந்து 1,661 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 206 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,360 ஆக உயர்ந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Breaking News: அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Covid 19 Vaccination: நாடு முழுவதும் 80 கோடியே 85 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
நாடு முழுவதும் கோவிட்-19 க்கான தடுப்பூசி 80 கோடியே 85 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Breaking News: ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது - ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)