News Today LIVE | எந்த பணியில் இருந்தாலும், முயற்சியுடன் இருங்கள், நம்பிக்கை இழக்காதீர்கள் - பிரதமர் மோடி
Breaking News LIVE Today Tamil, 26 Dec: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
இந்தியாவில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தம் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேபோல், ஜனவரி 10 ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அனைவரும் இந்த வருடம் படித்த புத்தகங்களின் பெயர்களை பகிருங்கள் - பிரதமர் மோடி
படிக்கும் பழக்கும் ஊக்குவிக்கப்படவேண்டும். அனைவரும் இந்த வருடம் படித்த புத்தகங்களின் பெயர்களை பகிருங்கள். இதன்மூலமாக நான் அனைவரும் 2022-இல் மற்றவர்களுக்கு படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்
நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்பு..
நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிலை திறப்பு. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன் சிலையைஇன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாவலர் நெடுஞ்செழியன் 1971 முதல் 1975 வரை கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 3இல் சிறார் தடுப்பூசி சைதையில் தொடக்கம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மூக்கு வழியே செலுத்தப்படும், டி.என்.ஏ தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் - பிரதமர் மோடி
Nasal vaccine, world's first DNA vaccine against Covid will soon start in India: PM Modi in address to nation
— Press Trust of India (@PTI_News) December 25, 2021
இந்தியாவில் தடுப்பூசி எடுக்க தகுதியான நபர்கள் 61% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது - பிரதமர் மோடி
आज भारत की वयस्क जनसंख्या में से 61 प्रतिशत से ज्यादा जनसंख्या को वैक्सीन की दोनों डोज लग चुकी है।
— PMO India (@PMOIndia) December 25, 2021
इसी तरह, वयस्क जनसंख्या में से लगभग 90 प्रतिशत लोगों को वैक्सीन की एक डोज लगाई जा चुकी है: PM @narendramodi