Breaking News: டெல்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டது.
தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று தீபாவளி கொண்டாடினார்.
வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர், "பேரரசுகள் வரும், போகும் ஆனால் இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது இன்றும் இருக்கிறது, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் அது நிலைத்திருக்கும். நாட்டினை அரசாகவோ, அதிகாரமாகவோ, அல்லது பேரரசாகவோ நாம் உணரவில்லை, நம்மைப்பொருத்தவரை இது வாழ்க்கைமுறை ஆன்மாவின் இருத்தல், இதனைப் பாதுகாப்பது புவியியல் ரீதியான எல்லைகளைப் பாதுகாப்பது என்ற வரம்போடு நின்றுவிடவில்லை, நம்மைப்பொருத்தவரை தேசப்பாதுகாப்பு என்பதன் பொருள் தேசத்தின் துடிப்பை, தேசத்தின் ஒற்றுமையை, தேசத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகும்” என்று தெரிவி த்தார் .
ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Speaking at Kedarnath. Watch. https://t.co/QtCLIbRZy7
— Narendra Modi (@narendramodi) November 5, 2021
ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இன்று திறந்து வைத்தார்.
சென்னையில் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது
சென்னை மூச்சு திணறி தடுமாறுகிறது, சில மணி நேரத்தில் 45சிகரெட் பிடித்த சென்னைவாசிகள்.
— G. Sundarrajan (@SundarrajanG) November 4, 2021
பாட்டாசு நச்சு புகையால் சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் மிக ஆபாயகரமான அளவுகளுக்கு சென்றுள்ளது.
Air Quality Index -AQI 50 இருந்தால் நல்ல காற்று,100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. pic.twitter.com/G1z50C115V