Breaking Live : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இறுதிகட்டத்தை எட்டுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடையும் வரை ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் அமைதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Dainik Bhaskar செய்தி நிறுவனத்தில் ஐ.டி அதிகாரிகள் சோதனை
கோவிட் 2ம் அலை மரணங்கள் குறித்து விரிவாக செய்தி வெளியிட்ட Dainik Bhaskar செய்தி நிறுவனத்தில் தற்போது வருமான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.
மூன்று வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு: நாடாளுமன்றம் காந்தி சிலைக்கு முன் ராகுல் காந்தி போராட்டம்
நாடாளுமன்றத்தில் காந்தி சிலைக்கு முன் விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
கமல்ஹாசன் ட்வீட்: தமிழக முதல்வரும் மக்கள் நீதி மய்யம் இலக்கினை பின்பற்றுகிறார்
கமல்ஹாசன் ட்வீட்: தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு - எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை
விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய சகோதரருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்.ஏ புரம் சாய்பாபா கோயில் அருகே சாய் அப்பார்ட்மெண்ட்டில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.