மேலும் அறிய

''பஸ்ல சத்தமா பாட்டு கேட்கவோ, பேசவோ கூடாது.. நடவடிக்கை பாயும்'' - அரசு அதிரடி உத்தரவு 

ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டாலோ படம் பார்த்தாலோ சிக்கல் இல்லை. சிலர் ஓபன் வால்யூமை வைத்துக்கொண்டு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தருவார்கள்

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சத்தமாக பாட்டு கேட்டால் நடவடிக்கை பாயும் என கேரள அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 பயணம் செய்பவர்கள் பாட்டு கேட்பதும் வழக்கமான ஒன்று. பாட்டோ, வீடியோவோ, படமோ அவரவர் விருப்பத்துக்கு எதையாவது அலுப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டே பயணம் செய்வார்கள். ஆனால் அது செய்தாலும் அது அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும். ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டாலோ படம் பார்த்தாலோ சிக்கல் இல்லை. சிலர் ஓபன் வால்யூமை வைத்துக்கொண்டு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தருவார்கள். இந்த இடையூரால் அருகில் இருப்பவர்களுக்குத் தான் பெரும் தொல்லை. இந்த பிரச்னைக்குத்தான் தற்போது கேரள அரசு தீர்வு கூறியுள்ளது.


'பஸ்ல சத்தமா பாட்டு கேட்கவோ, பேசவோ கூடாது.. நடவடிக்கை பாயும்'' - அரசு அதிரடி உத்தரவு 

தடை..

கேரள அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செல்போனில் அதிக சத்தம் போட்டு பேசவும், அதிக சத்தத்தில் பாடல் கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் நடவடிக்கை பாயும் என கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரு பெண் பயணியின் புகாரால் இந்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.  சில தினங்களுக்கு முன்பு கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் கேரள போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் ஒன்றை அளித்தார். 

அதில், '' கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் சென்றேன். அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் அதிக சத்தத்தில் பாடலைக் கேட்டார். இதனால் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கமே போய்விட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட கேரள அரசு இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்துகளில் அறிவிப்பு பலகை வைக்கவும், உரிய விதிமுறையை பயணிகள் பின்பற்றுவது குறித்து கண்காணிக்கவும் நடத்துநர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது


'பஸ்ல சத்தமா பாட்டு கேட்கவோ, பேசவோ கூடாது.. நடவடிக்கை பாயும்'' - அரசு அதிரடி உத்தரவு 

ரயிலிலும்...

இதேபோல் உத்தரவை ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. அதில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் யாரும் செல்போனில் சத்தம்போட்டு பேசவோ, பாட்டு வைக்கவோ கூடாது  எனக் குறிப்பிட்டுள்ளது.


200 அடி பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்ட இளைஞர்...! ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட இந்திய விமானப்படை..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget