81 சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம்... சிறையில் இருந்து கொண்டு பிஸினஸ் செய்த சுகேஷ்! திடுக் தகவல்!
சிறைக்கு வெளியே உள்ள அவரது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள அதிகாரிகள் மொபைல் போன்கள் மற்றும் பிற வசதிகளை சுகேஷ் சந்திரசேகருக்கு வழங்கியுள்ளனர்.
டெல்லி ரோகினி சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகள், சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், சிறைக்குள் இருந்து கொண்டு அவர் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?
சிறைக்கு வெளியே உள்ள அவரது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள அதிகாரிகள் மொபைல் போன்கள் மற்றும் பிற வசதிகளை சுகேஷ் சந்திரசேகருக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
And not to forget Sukesh ChandraShekar has told to ED
— Venki 🇮🇳🚩 (@VenkiForSSR) July 10, 2022
He helped ShradhaKapoor to get away from the NCB case.
Who were the officers investigating the case?Why did they let go so many people?
Is this what honest officers do?https://t.co/bb3FGgFC9g
Sushant Made Scapegoat By NCB
லஞ்சம் பெற்ற 81 அதிகாரிகளின் பெயர் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், சிறைச்சாலை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உதவியைப் பெற்று வெளியில் உள்ள தன்னுடைய கூட்டாளிகளை அவர் தொடர்பு கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பணமோசடி மற்றும் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டில் சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம், சிறை ஊழியர்களிடமிருந்து தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பிற்காக சிறை அதிகாரிகளுக்கு பணம் வழங்கியதாகவும் சுகேஷ் சந்திரசேகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், திகார் சிறையில் உள்ள ஊழியர்கள் தன்னிடம் இருந்து சுமார் 12.5 கோடி ரூபாயை மிரட்டி பறித்ததாக அவர் குற்றம்சாட்டினார். பல கோடி மோசடி வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ரான்பாக்ஸி லேப் விளம்பரதாரர்கள் ஷிவிந்தர் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோரின் குடும்பத்தினர் எனக் கூறி சிறையில் இருந்து கொண்டு சுகேஷ் சந்திரசேகர் ஆள் மாறாட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்