Surya Sister : "ஜோதிகா அண்ணிதான் எனக்கு வழிகாட்டி.." பாராட்டு மழை பொழியும் சூர்யா, கார்த்தி தங்கை..!
நடிகர் சிவக்குமாரின் குடும்பமே நட்சத்திரக் குடும்பமாகிக் கொண்டிருக்கிறது. சூழலில் அதில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு இணைந்துள்ளார் பிருந்தா சிவகுமார்.
![Surya Sister : Singer and surya sister Brindha Sivakumar speaks about Jyothika Surya Sister :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/12/972dc191d64411514dec2b39aa778dd91668266898102109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சிவக்குமாரின் குடும்பமே நட்சத்திரக் குடும்பமாகிக் கொண்டிருக்கிறது. சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என்று ஏற்கெனவே பட்டியல் பெரிதாக இருக்கும் சூழலில் அதில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு இணைந்துள்ளார் பிருந்தா சிவகுமார்.
சூர்யா, கார்த்தி தங்கை :
ஆம் சிவகுமாரின் மகளும், சூர்யா, கார்த்தியின் தங்கையுமான பாடகி பிருந்தா சிவகுமார் ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே ஆலியா பட்டிற்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
அவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், "எனக்கு டப்பிங் வாய்ப்பு கிடைக்கக் காரணம் எனது உறவினர் சுமன். இந்தப் படத்தில் பணிபுரிந்த சுமன் எங்கள் தூரத்துச் சொந்தம். என் பாடல்களையும் கேட்டுள்ளார். அவர் தான் என்னை வெவ்வேறு எமோஷன்களில் பேசவைத்து ‘பிரம்மாஸ்திரா’ மெயின் டீமுக்கு அனுப்பினார் சுமன். ஆலியா பட் குரலுக்கு ஏற்றவாறு எனது குரல் செட் ஆனதால், அவர்களும் ஓகே சொன்னார்கள். டப்பிங்கும் நடிப்பது போன்றுதான். புது அனுபவமாக இருந்தது என்றார்.
நல்ல பாடகி :
பிருந்தா சிவகுமார் ஒரு நல்ல பாடகி. அவரின் குரலில் ஏராளமான பாடல்கள் தமிழ் படங்களில் வெளியாகியுள்ளன. குறிப்பாக "மிஸ்டர் சந்திரமௌலி", 'ராட்சசி', 'ஜாக்பாட்', 'பொன்மகள் வந்தாள்', 'ஓ2' போன்ற படங்களில் தனது இனிமையான குரலால் ரசிகர்களை கவந்தவர் பிருந்தா. பாடல்களில் கவனம் செலுத்தி வந்த பிருந்தா சிவகுமாருக்கு ஒரு மெகா பட்ஜெட் ஃபான் இந்திய படமான 'பிரம்மாஸ்திரா' படத்தி ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியுள்ளார் பிருந்தா சிவகுமார்.
அவருக்கு இது மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்த நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது அண்ணி ஜோதிகாவை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். என் பெரிய அண்ணி எனக்கு நல்ல வழிகாட்டி. அவர் குடும்பத்தை, பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் பாங்கே தனி. அவர் குழந்தைகளை குளிப்பாட்டுவதில் இருந்து, அவர்களை படிக்க வைப்பதிலிருந்து, அவர்களுக்கு வாங்கும் ஆடைகளை தேர்வு செய்வது வரை அப்படியொரு கவனம் செலுத்துவார். அவர்தான் எனக்கு ரோல் மாடல் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)