Sabarimala Temple : சபரிமலை செல்பவர்களின் கவனத்திற்கு.. இம்முறையும் இது கட்டாயம்!
SabarimalaTemple : சபரிமலையில் தரிசனம் செய்ய முன்பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தக்போபன் கூறுகையில், கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.
முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் 16-ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மணடல, மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும், இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயிலுக்கு வருவதற்கு பயணத்திற்காக ஆட்டோ, டெம்போ டிராவல், சிறிய வேன்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து வசதி:
பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிலக்கல்- பம்பை இடையே தினமும் 200 பேருந்துங்கள் இயக்கப்பட இருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜை தினத்தன்று ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர ஜோதியை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள், அதிக நபர்கள் குழுவாக பயணிக்கிறார்கள் எனில் அவர்களுக்கு கேரள போக்குவரத்து கழகம் சார்பில் தனி பேருந்து வசதி செய்து தரப்படும். குறைந்தது 40 நபர்கள் இருந்தால் மட்டுமே தனி பேருந்து வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை:
கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மேலும் ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 15-ஆம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
இதனை அடுத்து சபரிமலை கோயிலில் மகர, மண்டல பூஜைக்காக பக்தர்கள் நவம்பர் 16ம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கேரள அரசின் உத்தரவுக்கு இணங்க சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
நவம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, அத்துடன் மண்டலப் பூஜைகள் முடிவடைந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணிக்குதான் நடை சாத்தப்படும்.
பின்பு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் உலகப் புகழ்ப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறும். இதற்கு அடுத்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து ஜனவரி 20ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும். இந்நிலையில் கேரள மாநிலத்தின் விஷு வருட பிறப்புக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை திறக்கப்படும்.