மேலும் அறிய

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.

எஸ்ஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், விசாரணை விவரங்கள் கிடைக்கப் பெறும். அதன் மூலம் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதா? என்பதைக் கண்டறிய முடியும்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் மாநில அரசு தற்போதைக்கு தலையிடவோ அல்லது சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்கவோ முடியாது என்று மாநில தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் தெரிவித்தாா். கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.

கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாகக் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். முறையாக விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.  இதற்கிடையே சபரிமலை கோயிலில் கடந்த 2019ல் அரங்கேறிய தங்கத் திருட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது அப்போது நடந்த புனரமைப்புப் பணிகளின்போது கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் இருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டன.

அப்போது தான் தங்கம் திருட்டு போனது. துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் எனச் சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாகக் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இடையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்தக் குழுவே விசாரணையைக் கவனித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைப் பாதுகாக்கும் வகையில், எஸ்ஐடி விசாரணையில் முதல்வா் அலுவலகம் குறுக்கிட்டதாக முன்பு காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.

தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலைப்பாடு குறித்து தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்  கூறியதாவது, கேரள உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி விசாரித்து வருவதால், தற்போதைய நிலையில் மாநில அரசு தலையிடவோ அல்லது வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவோ முடியாது.

எஸ்ஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், விசாரணை விவரங்கள் கிடைக்கப் பெறும். அதன் மூலம் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும். அப்போது, சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க முடியும். சுவாமி ஐயப்பனின் தங்கத்தைத் திருடிய எவரையும் காங்கிரஸ் அரசு பாதுகாக்காது. அவா்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவா். இதுவே, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் மாநில அரசின் நிலைப்பாடு என்றாா்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget