சபரிமலை: திரௌபதி முர்முவின் தரிசனம்! முதல் முறையாக நிகழ்ந்த அதிசயம்! பரபரப்புடன் கூடிய தரிசனம்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை கேரள மாநிலம் சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாகக் கேரளா சென்றுள்ளார். அவர் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற நிலையில், இன்று அவர் சபரிமலையில் தரிசனம் செய்தார். இருமுடி கட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
கேரளாவில் உள்ள சபரிமலை உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சபரிமலைக்குத் தரிசனம் செய்ய வருகிறார்கள். இதற்கிடையே இன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்குத் தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் சபரிமலைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்காக 4 நாட்கள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மாலையில் கேரளா சென்றார். அங்கு அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்திலேயே வரவேற்பு கொடுத்தனர்.
அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார். அதைத் தொடர்ந்து முர்மு இன்று காலை சபரிமலை கோயிலில் ஐய்யபனை தரிசனம் செய்தார். இதற்காகக் காலை 9:35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்ற குடியரசுத் தலைவர் முர்மு, காலை 10:20 மணிக்கு நிலக்கல் ஹெலிபேடை அடைந்தார். அங்கிருந்து சபரிமலை சன்னிதானத்திற்குச் சிறப்பு வாகனத்தில் சாலை மார்க்கமாகச் சென்றார்.
சபரிமலையில் நண்பகல் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு, ஐயப்பனைத் தரிசனம் செய்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் ஒருவா் வருகை தருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகைக்காக புதிதாகப் போடப்பட்டிருந்த ஹெலிபேட் காங்கிரீட்டில், ஹெலிகாப்டர் சிக்கியதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாதாந்திர பூஜைகளுக்காக, அக்டோபா் 18ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். இந்த நாள்களில் தரிசனம் மேற்கொள்வதற்கு சுமாா் 30,000 போ் இணையவழியில் முன்பதிவு செய்திருந்தனர். நிறைவு நாளான இன்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திருவாங்கூா் தேவசம் போர்டு மேற்கொண்டிருந்தது.





















