மேலும் அறிய

Republic Day 2023: சூப்பர்..! குடியரசு தின விழா அணிவகுப்பு - வி.வி.ஐ.பி. வரிசையை அலங்கரிக்கப் போகும் சாமானியர்கள்..!

இந்த குடியரசு தின விழா சென்ட்ரல் விஸ்டா திறக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் குடியரசு தின விழாவாகும். அதனால் இந்த குடியரசு தின விழாவிற்கு பல புதுமையான விஷயங்கள் புகுத்தப்படுகிறது.

இந்த குடியரசு தின விழா சென்ட்ரல் விஸ்டா திறக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் குடியரசு தின விழாவாகும். அதனால் இந்த குடியரசு தின விழாவிற்கு பல புதுமையான விஷயங்கள் புகுத்தப்படுகிறது.

வி.வி.ஐ.பி. வரிசையில் சாமானியர்கள்:

வி.வி.ஐ.பி. கேலரியில் இந்தாண்டு ரிக்‌ஷா தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள், சென்ட்ரல் விஸ்டா கட்ட உதவிய கட்டிட தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்தினர், கர்தவ்ய பாதை பராமரிப்பு பணியாளர்கள், மளிகைக் கடைகாரர்கள் என பல சாமான்யர்கள் அமர வைக்கப்பட உள்ளனர்.

எகிப்து நாட்டின் அதிபர் அப்தல் பத்தா எல் சிஸி தான் 2023 குடியரசு தின நிகழ்சியின் தலைமை விருந்தாளியாக இருப்பார். இது இந்தியா, எகிப்து நாட்டின் தூதரக உறவின் 75வது ஆண்டு விழா என்பதால் எகிபது அதிபர் தலைமை விருந்தாளியாக அழைக்கப்பட்டுள்ளார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும் 24-ம் தேதி எகிப்து நாட்டு அதிபர் இந்தியா வருகிறார். அவருடன் 180 பேர் கொண்ட குழுவினர் வருகின்றனர்.

எகிப்து ராணுவம்:

குடியரசு தின அணிவகுப்பு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கும். கர்தவ்ய் பாதை முதல் ராஷ்டிரபதி பவன் வரையில் இந்தியா கேட் முதல் செங்கோட்டை வரை என நடைபெறும்.  இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து நாட்டுப் படையைச் சேர்ந்த 120 பேர் கலந்து கொள்கின்றனர்.
 
குடியரசு தினத்தன்று காலை 8 மணிக்கு கொடியேற்றம் நிகழும். 9.30 மணியளவில் அணிவகுப்பு தொடங்கும். பின்னர் பிரதமர் மோடி அமர் ஜவானில் மரியாதை செலுத்துவார். செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார். குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் பரவலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

குடியரசு தின வரலாறு:

நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்த விழாவிற்கான தலைமை விருந்தினர் யார்? எத்தனை மணிக்கு கொடியேற்றம் நிகழும் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 26 ஆம் தேதியன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட நாளே குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 24ம் தேதி 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது செயல்பாட்டிற்கு வந்தது.

ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி, மக்களின் ஆட்சி ஏற்பட்டது என, அன்றைய தினத்தை கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

குடியரசு தின கொண்டாட்டம்:

இந்தியாவின் முதலாவது குடியரசு தின அணிவகுப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டெல்லி இர்வின் விளையாட்டரங்கில் (இன்றைய தேசிய மைதானம்) நடைபெற்றது. 1950-1954 க்கு இடையில், குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் சில சமயங்களில் இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே கேம்ப், செங்கோட்டை மற்றும் சில சமயங்களில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றன. குடியரசு தின அணிவகுப்பு முதன்முறையாக 1955 ஆம் ஆண்டு ராஜ்பாத்தில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் இன்றுவரை ராஜ்பாத் பகுதியிலேயே நடைபெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Embed widget