Rajasthan Accident: ராஜஸ்தானில் சோகம்! டிராக்டர் மீது டெம்போ மோதி 15 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி?
Rajasthan Accident: பிகானரில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் வந்த ஒரு தனியார் பேருந்து, பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமம் அருகே சாலையோரம் நின்றிருந்த டிராக்டருடன் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது டெம்போ டிராவலர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது
கோர விபத்து:
பிகானரில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் வந்த ஒரு தனியார் பேருந்து, பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமம் அருகே சாலையோரம் நின்றிருந்த டிராக்டருடன் மோதியது. இதில் டெம்போ டிராவலரானது கடுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷ்னர் ஓம் பிரகாஷ் பாஸ்வான் தெரிவிக்கையில் “சிலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சிறந்த சிகிச்சை பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்,” என்று கூறினார்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்:
இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பஜன் லால் சர்மா வருத்தம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சேவையையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
"பலோடியின் மடோடா பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் துயரமானது மற்றும் மனதைப் பிழிகிறது. துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சையை உறுதி செய்ய மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்," என்று முதல்வர் X இல் பதிவிட்டுள்ளார்.
அசோக் கெலாட் இரங்கல்:
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டும் உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் "பலோடியின் மடோடாவில் நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக எனக்கு இப்போதுதான் செய்தி கிடைத்தது. இதைக் கேட்டு என் இதயம் மிகவும் வருத்தமடைந்தது. இறந்த அனைவருக்கும் அவரது புனித பாதங்களில் இடம் அளிக்கவும், அவர்களது குடும்பங்களுக்கு வலிமை அளிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அசோக் கெலாட் X இல் பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம் ஜெய்சால்மரில் ஒரு ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்ததில் 26 பேர் உயிருடன் எரிந்து இறந்தனர். ஏ/சி-யில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் வெளியேறும் வாயில் இல்லை. விபத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத மாற்றம் மற்றும் அனுமதி விதிமுறைகளை மீறுவதற்கு எதிராக போக்குவரத்துத் துறை தீவிர சோதனையை நடத்தினர்.






















