மேலும் அறிய

"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!

பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்திய அரசு இயந்திரத்தை எதிர்த்துப் போராடுகிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வேறு நாடாக இருந்திருந்தால் அவரை கைது செய்திருப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "முக்கியமான நேரத்தில் புதிய தலைமையகத்தைப் பெற்றுள்ளோம்.

"RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க"

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையவே இல்லை என்று நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் கூறி இருக்கிறார். இது, நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகிறது என்று நினைக்கிறேன். ராமர் கோயில் கட்டப்பட்டபோதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிறார். அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், அரசியலமைப்புச் சட்டம் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நாட்டுக்கு தெரிவிக்கும் துணிச்சல் மோகன் பாகவத்துக்கு இருக்கிறது.

நேற்று அவர் கூறியது தேச துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் செல்லாது, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது எல்லாம் செல்லாது, இதைப் பகிரங்கமாகச் சொல்லும் துணிச்சல் அவருக்கு உண்டு. வேறு எந்த நாடாக இருந்திருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்.

ராகுல் காந்தி பேசியது என்ன?

கடந்த 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்வது ஒவ்வொரு இந்தியனையும் அவமதிக்கும் செயல். இந்த முட்டாள்தனத்தைக் கேட்பதை நாம் நிறுத்த வேண்டிய நேரம் இது. சுதந்திர போராட்டம் குறித்து தெரியாமலேயே சிலர் கத்துகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் பாஜகவை மட்டுமல்ல, இந்திய அரசு இயந்திரத்தை எதிர்த்தே போராடுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை போன்று நமது சித்தாந்தமும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. நமது சித்தாந்தம், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளாக போராடி வருகிறது.

இந்த போராட்டம் நியாயமானதா என நீங்கள் நினைக்கிறீர்களா? நியாயமான போராட்டம் நடக்கவில்லை. நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் நம்பினால். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் நம் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றிவிட்டன. நாங்கள் இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் ஒட்டுமொத்த இந்திய அரசு இயந்திரத்தை எதிர்த்துப் போராடுகிறோம்" என்றார்.

தலைப்பு செய்திகள்

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
Embed widget