ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் வாடிவாசல்.
சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைகிறது.
கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தாயாரிக்கிறார்.
2020-ல் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் படப்பிடிப்பு துவங்கவில்லை.
விடுதலை படத்தில் வெற்றிமாறன் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டிற்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், மாட்டு பொங்கல் ஸ்பெஷலாக வாடிவாசல் படம் குறித்து தயாரிபாளர் எஸ். தாணு மாஸான அப்டேட்டை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தானு பதிவிட்டிருந்தார்.
அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது எனக் கேப்ஷனில் கூறியுள்ளார்.
இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.