Prakash Raj joins KCR: இனி அரசியல் ஆட்டமா? தெலங்கானாவை பரபரக்க வைத்த நடிகர் பிரகாஷ்ராஜ்.!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் உத்தவ் தாக்கரே சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இடம்பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ் இன்று மும்பைக்கு பயணம் செய்து மகாராஷ்டிரா முதல்வரான உத்தவ் தாக்கரேவை சந்தித்து, தங்களது கட்சி உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதனையடுத்து, அவருடன் மதிய உணவை முடித்த அவர் தேசிய காங்கிரஸ் தலைவரான சரத் பவாரை சந்தித்து கலந்துரையாடினார்.
சந்திரசேகர ராவின் இந்த மும்பை பயணத்தில் முதன்முறையாக, அவரின் மகளும் சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவை அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் அவரது அண்ணன் மகனான, ஹரிஷ் ராவை இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெற வில்லை.
View this post on Instagram
மேலும் இந்த சந்திப்பில், எம்.பிக்களான பிபி பட்டில், ஜி ரஞ்சித் ரெட்டி, ஜே. சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் இடம்பெற்றனர். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருக்கிறார். பிரகாஷ்ராஜ் கேசிஆருடன் மும்பை சென்றாரா அல்லது உத்தவ்தாக்கரே உடன் அவர் இருந்தாரா என்பது தெரியவில்லை. அதே போல சிவசேனா மற்றும் பிரகாஷ்ராஜ் கூட்டணியானது ஆச்சரியமளிக்க கூடியதாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்