மேலும் அறிய

Watch Video: அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்.. உடனே வழிவகுத்த பிரதமர் மோடியின் கான்வாய்.. வைரலாகும் வீடியோ..

பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி, தனது தேர்தல் பரப்புரையின்போது, அவசர அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல பிரதேசத்திற்கு, பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி, தனது தேர்தல் பரப்புரையின்போது, அவசர அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காங்ரா மாவட்டம் சம்பி கிராமத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள காணொளியில், சாலையில் வேகவாக கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக, பிரதமர் மோடி, தனது வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காத்திருப்பதும் வாகனம் கடந்து சென்ற பின்பு, சாலையில் செல்வதும் பதிவாகியுள்ளது.

இன்று, சம்பி கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இமாச்சல பிரதேசத்திற்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு நடத்தப்பட்ட தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

விரிவாக பேசிய அவர், "காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் சண்டைகளை நாங்கள் எப்போதும் பார்க்கிறோம். ராஜஸ்தானிலும் பிற பகுதிகளிலும் பார்த்தோம். ஸ்திரமின்மை, ஊழல், மோசடிகளுக்கு காங்கிரஸ்தான் உத்தரவாதம். காங்கிரஸால் இமாச்சல பிரதேசத்திற்கு ஒரு நிலையான அரசாங்கத்தைக் கொடுக்க முடியாது, அவர்களும் அதை விரும்பவில்லை.

இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரசின் ஆட்சி உள்ளது. அதனால்தான், அந்த மாநிலங்களில் இருந்து வளர்ச்சி செய்திகள் வருவதில்லை. அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) ஊழலைப் பற்றி சிந்தித்து திட்டமிடுகிறார்கள். ஆனால், நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கிறோம். இன்று இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை. 

இமாச்சலப் பிரதேசம் ஒரு வலுவான அரசாங்கத்தையும் இரட்டை இயந்திர சக்தியையும் கொண்டிருக்கும் போது, ​​அது அனைத்து சவால்களையும் சமாளித்து புதிய உயரங்களை எட்டும்" என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடி குஜராத்தின் காந்திநகரிலிருந்து அகமதாபாத் சென்றிருந்தார். அப்போது, அந்த பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றதால், மோடி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வாகனத்திற்கு வழி விட்ட சம்பவமும் அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

குஜராத் பாஜக ஊடக பிரிவு பகிர்ந்த வீடியோவில், அகமதாபாத் - காந்திநகர் சாலையில் பிரதமர் கான்வாயின் இரண்டு எஸ்யூவி வாகனகள் ஆம்புலன்ஸ் கடந்து செல்வதற்காக சாலையில் ஒதுங்கி சென்றதை காணலாம். ஆம்புலன்ஸ் கடந்து சென்றவுடன் அந்த சாலையில் பிரதமரின் வாகனங்கள் மீண்டும் பயணத்தை தொடங்கின.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget