தலைவன் என ரஜினிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
தலைவனுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality...that’s Shri @rajinikanth Ji for you.

It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.
— Narendra Modi (@narendramodi) April 1, 2021

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.