மேலும் அறிய

"எனக்கு பிடிச்ச திட்டம்.. நீங்க ஏமாற மாட்டிங்கனு நினைக்கிறேன்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!

ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக மோடி கூறியுள்ளார்.

ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் ஒன்பதாண்டு நிறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்த திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

அரசைப் பொறுத்தவரை, புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மோடி கூறியுள்ளார். ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் இந்த வெற்றியானது இன்றைய இந்தியா ஆற்றல்மிக்க, நம்பிக்கை மிகுந்த, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள இந்தியா என்பதைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம்"

புத்தொழில் உலகில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு இளைஞரையும் பாராட்டுவதாகவும் மேலும் அதிகமான இளைஞர்கள் இதில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், "புதுமை, தொழில்முனைவு, வளர்ச்சி ஆகியவற்றை சிறப்பாக மறுவரையறை செய்த ஒரு மைல்கல் முயற்சியான ஸ்டார்ட் அப்  இந்தியா இயக்கத்தின் ஒன்பதாண்டு நிறைவை (#9YearsOfStartupIndia) இன்று நாம் கொண்டாடுகிறோம்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சக்திவாய்ந்த வழியாக இது உருவெடுத்துள்ள நிலையில், இந்தத் திட்டம் எனக்கு  மிகவும் பிடித்த முக்கியமான திட்டமாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்த சிறந்த திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது”

"அரசைப் பொறுத்தவரை, புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையம் எடுத்துள்ளது. நமது கொள்கைகள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், வளங்களை அதிக அளவில் அணுகுதல், ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் துறையினருக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன.

பிரதமர் மோடி என்ன பேசினார்?

நமது இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு முடிவெடுப்பவர்களாக  மாறுவதற்காக, புதிய கண்டுபிடிப்புகளையும் அதற்கான தொழில் பாதுகாப்பு மையங்களையும் நாங்கள் தீவிரமாக ஊக்குவித்து வருகிறோம். புத்தொழில் நிறுவனத்தினருடன் நான் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து உரையாடி வருகிறேன்”

"ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் இந்த வெற்றியானது இன்றைய இந்தியா ஆற்றல்மிக்க, நம்பிக்கை மிகுந்த, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள இந்தியா என்பதை பிரதிபலிக்கிறது. இந்த பயணத்தை நாம் மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு கனவையும் மேம்படுத்தும் வகையில் தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிக்கும் ஒரு தொழில்முனைவோர் சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்த்தேடுப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறோம்.

புத்தொழில் உலகில் உள்ள ஒவ்வொரு இளைஞரையும் நான் பாராட்டுகிறேன். மேலும் அதிகமான இளைஞர்கள் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை" என குறிப்பிட்டுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget