சிரித்தபடியே மார்பில் சுட்டுக்கொண்டு இறந்த இளைஞர்; வைரல் வீடியோ- டெல்லியில் சோகம்!
சிரித்துக்கொண்டே துப்பாக்கியை, தன் நெஞ்சை நோக்கிக் குறிவைக்கிறார். சுடாதீர்கள் என்று அருகில் இருந்து ஒரு குரல் கேட்டாலும் மார்பில் சுட்டுக் கொள்கிறார்.

சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் வரும் வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்வி எழுந்து வருகிறது.
சிரித்துக்கொண்டே சுடும் இளைஞர்
அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில், கட்டமைப்பான உடல்வாகு கொண்ட இளைஞர் ஒருவர், துப்பாக்கியை லோட் செய்கிறார். சிரித்துக்கொண்டே துப்பாக்கியை, தன் நெஞ்சை நோக்கிக் குறிவைக்கிறார். சுடாதீர்கள் என்று அருகில் இருந்து ஒரு குரல் கேட்டாலும் மார்பில் சுட்டுக் கொள்கிறார். அப்படியே சாய்ந்து கீழே விழுபவரின் மார்பில் இருந்து ரத்தம் பெருகுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது ஏஐ வீடியோவாக இருக்குமா என்று கேள்விகள் எழுந்த நிலையில், இல்லை, உண்மையான சம்பவம்தான் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
டெல்லியில் நடந்த சம்பவம்
டெல்லியில், தல்லுபுரா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பவன் என்னும் இளைஞர் இந்த சம்பவத்தால் உயிரிழந்துள்ளார்.
சுடப்பட்ட துப்பாக்கி லைசன்ஸ் பெறப்பட்டது என்றும் வீடியோவை ரெகார்ட் செய்த இளைஞருக்குச் சொந்தமானது துப்பாக்கி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
The man was casually handling a licensed pistol for reel and accidentally shot himself in the chest. People dying on roads, trains, tracks and now with pistol for reel 💔pic.twitter.com/NqZosSR2oP
— shwwee (@sillyshweta) March 17, 2026
ரீல்ஸ் எடுக்கும்போது துயர சம்பவம்
துப்பாக்கிக்குச் சொந்தமான இளைஞர், எப்படி துப்பாக்கியை லோட் செய்வது? இயக்குவது எப்படி? என்று விளக்கி உள்ளார். துப்பாக்கி லாக்கில் இருப்பதாக நினைத்து தன்னைத் தானே சுட்டுள்ளார்.
பவன், துப்பாக்கியுடன் ஒரு ரீல் எடுக்க நினைத்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
























