தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா.
சமீபத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்றிருந்தார்.
அங்கே குடும்பத்துடன் சில நாட்கள் தங்கி புத்தாண்டு கொண்டாடிவிட்டு நாடு திரும்பினார்.
தற்போது பொங்கலை அவர் வீட்டின் மாடியில் கொண்டாடியுள்ளார்.
அங்கே பொங்கல் வைத்து, கரும்பு மற்றும் பழங்கள் வைத்து கொண்டாடுவதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் ’நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம்’ என்ற கேப்சனில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் பலரும் அந்த போஸ்ட்டில் கமெண்ட் செய்து வருகின்றனர்.