மேலும் அறிய

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!

இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் நாட்டின் பன்முகத்தன்மையை வளம் பெறச்செய்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் பேசிய பாலி மொழி, தற்போது பொது புழக்கத்தில் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

"அடிமை மனப்பான்மையால் பின்தங்கினோம்"

மொழியைப் புரிந்து கொள்வது என்பது தொடர்புக்கான ஒரு ஊடகமாக மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஆன்மாவாக திகழ்வதாக கூறிய பிரதமர், “எந்தவொரு சமுதாயத்தின் மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆன்மீகத்தின் பாரம்பரியம் தான் அதனை நிலை பெறச் செய்கிறது” என்றார்.

எந்தவொரு நாடாலும் கண்டுபிடிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேதம் அல்லது கலைப்பொருட்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமிதத்துடன் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு நாடும் தங்களது பாரம்பரியம் மற்றும் அடையாளத்துடன் இணைந்திருந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பு ஏற்பட்ட படையெடுப்புகளாலும், சுதந்திரத்திற்குப் பிறகு அடிமை மனப்பான்மை காரணமாகவும் இந்தியா இதில் பின்தங்க நேர்ந்ததாகவும் கூறினார்.

எதிர் திசையில் பணியாற்றும் வகையில், இந்த நாட்டை ஆளாக்கிய சூழலியல் இந்தியாவை ஆட்டுவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆன்மாவில் வசித்தவர் புத்தர் என்று கூறிய அவர், சுதந்திரத்தின் போது பின்பற்றப்பட்ட அவரது அடையாளங்களை அதற்குப் பிந்தைய தசாப்தங்களில் மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசியது என்ன?

இந்த நாடு தற்போது அச்ச உணர்விலிருந்து விடுபட்டு முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதுடன், பெரிய முடிவுகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.  ஒரு புறம் பாலி மொழி செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுள்ள வேளையில், மறுபுறம் மராத்தி மொழிக்கும் அதே அங்கீகாரம்  வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.

மராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட பாபாசாஹேப் அம்பேத்கரும், புத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக திகழ்ந்ததுடன், பாலி மொழியில்தான் அவர் தம்ம தீக்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

“இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் நமது பன்முகத்தன்மையை வளம் பெறச்செய்கின்றன” என்றும் பிரதமர் தெரிவித்தார். கடந்த காலங்களில் மொழிக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய மோடி, நமது ஒவ்வொரு மொழியும், தேச நிர்மாணத்தில் முக்கியப் பங்கு வைத்திருப்பதை எடுத்துரைத்தார். 

இந்தியாவால் தற்போது பின்பற்றப்படும் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இத்தகைய மொழிகளைப் பாதுகாக்கும் ஊடகமாக மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தாய் மொழியில் கல்வி பயிலும் விருப்பம் கிடைத்ததிலிருந்து, தாய் மொழிகள் வலிமைப் பெற்று வருவதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? -  அமைச்சர் துரை முருகன்
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? - அமைச்சர் துரை முருகன்
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
Embed widget