Most Powerful Indians: சக்திவாய்ந்த இந்தியர்கள் தரவரிசை பட்டியல்.. முதலிடம் பிடித்த பிரதமர் மோடி!
இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 வது இடத்திலும் உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள ‘மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2024’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 வது இடத்திலும் உள்ளார். அந்த பட்டியலில் 2வது இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், 4வது இடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 5வது இடத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதேபோல் 6வது இடத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 7வது இடத்திலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது இடத்திலும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 9வது இடத்திலும், தொழிலதிபர் கௌதம் அதானி 10வது இடத்திலும் உள்ளனர்.
1. நரேந்திர மோடி:
ஆங்கில நாளிதழின்படி, பிரதமர் மோடி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இவரது பெருமையும், வலிமையும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடிக்கு 95.6 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். இது உலகில் உள்ள மற்ற தலைவர்களின் ஃபாலோவர்களை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
2. உள்துறை அமைச்சர் அமித் ஷா:
பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு மற்றொரு சக்திவாய்ந்த இந்தியராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 2023 டிசம்பரில் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக மகத்தான வெற்றியைப் பெற்றது. இதற்கு பாஜகவின் முக்கிய வியூகவாதியாகவும் திட்டம் தீட்டியது அமித் ஷாதான். இதனால், இவரது புகழும் தற்போது உயர்ந்து வருகிறது.
3. மோகன் பகவத்:
2009-ல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவராக இருந்த கே. எஸ். சுதர்சன் உடல் நலக்குறைவால் பதவி விலகிய போது, மோகன் பாகவத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பெயர் பெரியளவில் தெரிவதற்கு முன்னெடுத்து வருகிறார் மோகன் பகவத். கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்த ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி அருகில் அமர்ந்திருந்தார்.
4.டிஒய் சந்திரசூட்:
தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட், நவம்பர் 2022 முதல் உச்சநீதிமன்றத்தின் பணியாற்றி வரும் இந்தியாவின் 50வது மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி ஆவார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது உள்ளிட்ட பல்வேறு தீர்ப்பு வழங்கி புகழ் பெற்றவர்.
உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் புகழ்பெற்று விளங்குகின்றனர்.