SC Pegasus Case Hearing: பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகார வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் பெயரே பெகசஸ் உளவுப்பட்டியலில் இருப்பது குறித்த ரகசியம் வெளியான நிலையில் தற்போது வழக்கின் மீதான விசாரணை இன்று தொடங்கவிருக்கிறது.
பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் சசிகுமார் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கவிருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிப்பட்ட விசாரணை வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த வழக்கின் மீது இன்று விசாரணை தொடங்கவிருக்கிறது.
Supreme Court to hear tomorrow a bunch of petitions seeking probe into #Pegasus snooping controversy and disclosures from the Union Government @GoI_MeitY on the surveillance issue.#PegasusSnoopgate @IndEditorsGuild @paranjoygt @JagdeepChhokar pic.twitter.com/WkZl5clrGM
— Live Law (@LiveLawIndia) August 4, 2021
முன்னதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் பெயரே பெகசஸ் உளவுப்பட்டியலில் இருப்பது நேற்று தெரிய வந்தது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திய உச்ச நீதிமன்ற பதிவாளர், முன்னணி வழக்கறிஞர்கள் தொலைபேசி எண்களும் இந்த உளவுச் செயலியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என 'தி வயர்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு பெகசஸ் தரவு தளத்தில் சேர்க்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண் ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பதை அவரிடம் பேசி தி வயர் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பிஎஸ்என்எல் ஆவணங்கள் அடிப்படையில், பெகசஸ் தரவில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் 2010 செப்டம்பர் 18 முதல் 2018 செப்டம்பர் 19 வரை நீதிபதி மிஸ்ராவின் பெயரில் பதிவாகியது தெரியவந்துள்ளது.
மொபைலில் ஊடுருவியதும் பிற வணிக செயலிகள் போல தகவல்களை மட்டும் திருடுவதில்லை. காமிரா, மைக்ரோபோன், கீ போர்டு என மொத்த மொபைல் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என்பதால் முன்னாள் நீதிநதி அருண் மிஸ்ராவை தி வயர் நிறுவனம் தொடர்பு கொண்டது. +9194XXXXXXX என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், " 2013- 14 காலத்துக்குப் பிறகு இந்த எண்ணை நான் பயன்படுத்தவில்லை. நான், இந்த நம்பரை இப்போது பயன்படுத்தவில்லை" என்று அருண் மிஸ்ரா தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், " இந்த குறிப்பிட்ட எண்ணை நான் 2014 , ஏப்ரல் 21 அன்று ஒப்படைத்து விட்டேன். 2019 இல் எதற்காக எனது தொலைபேசி எண் பெகசஸ் தரவில் சேர்க்கப்பட்டது என தெளிவாகத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ‘பிரதமர் மோடி ஒரு தீர்க்கதரிசி’என்று வெளிப்படையாகப் புகழ்ந்து சர்ச்சைக்கு ஆளானவர் மிஸ்ரா. இந்நிலையில், நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கான சட்டம் இயற்றப்பட்டபோது அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே இருக்க வேண்டும் என விதி உருவாக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பாஜக அரசு, ‘ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி’ என அதை மாற்றியது. அந்த சட்டத் திருத்தத்தின் காரணமாகவே ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 5 பேர் தகுதியுடையவர்களாக இருந்தும் முதன் முறையாக தலைமை நீதிபதி அல்லாத அருண் மிஸ்ரா அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்" என்று தெரிவிக்கப்பட்டது.