Pan Aadhar Linking : ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது... வருவமான வரித்துறை அதிரடி அறிவிப்பு...!
Pan Aadhar Linking : அடுத்த மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்காத பான் கார்டுகள் செல்லாகாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
மார்ச் 31-ஆம் தேதி கடைசி
வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். தற்போது இதற்கான அவகாசத்தை வருமான வரித்துறை நிர்ணயித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ”வருமான வரிச்சட்டம் 1961-ன்படி விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பான்கார்டை ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயலற்றதாகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் "இது கட்டாயம், அவசியம், தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.
— Income Tax India (@IncomeTaxIndia) December 24, 2022
From 1.04.2023, the unlinked PAN shall become inoperative.
What is mandatory, is necessary. Don’t delay, link it today! pic.twitter.com/eJmWNghXW6
இணைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
- ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
- அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
- ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
- விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்
- இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.
பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என பரிசோதிப்பது எப்படி?
-
- www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
- அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும்
- இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்புகுறித்த செய்தி வரும்.