தெலங்கானா: இந்திய ராணுவம் இன்று முதல் அக்னிபாத் திட்டம் குறித்து விழிப்புணர்வு
தெலங்கானாவில் அக்னிபாத் திட்டம் குறித்து இன்று முதல் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
தெலங்கானாவில் அக்னிபாத் திட்டம் குறித்து இன்று முதல் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
தெலங்கானா மாவட்டத்தில் 75 தொலைதூர கிராமங்களில் "கிராம சேவை-தேசத்தின் சேவை" என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கிராமத்தினருடன் இணைந்து தூய்மைப் பணிகளையும் ராணுவ வீரர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
In its commitment towards Nation building & to commemorate the forthcoming #ArmyDay 2023, a mega outreach campaign, ‘Gram Seva - Desh Seva’ is being conducted by the #IndianArmy on 30 December 2022. 1/3#ArmyDay 2023#AazadiKaAmritMahotsav pic.twitter.com/yM2fsEBSQp
— ADG PI - INDIAN ARMY (@adgpi) December 28, 2022
கைப்பந்து, கோ கோ, கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடவும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஊக்குவிக்கப்படும். கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் ராணுவ வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வீர் நாரி வசதிகள் எடுக்கப்பட்டு அவர்களின் குறைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி கூறுகையில், "ஊரகப் பகுதி மக்களுடன் தொடர்புகொள்ள இந்த பிரச்சாரம் உதவும். இது அந்தப் பகுதி மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்" என்றார்.
நாட்டின் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவதற்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் ராணுவ ஆட் சேர்ப்பு திட்டம், இளைஞர்கள் மத்தியில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது விகிதம் குறைக்கப்பட்டு ஓய்வூதியத்திற்கான செலவு குறைக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு போராட்டம் விரிவடைந்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது.
இந்நிலையில், ஆயுதப் படைகளில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் நாட்டின் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவதற்கான அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
"இந்தத் திட்டம் இளைஞர்களிடம் உள்ள திறன்களை மேம்படுத்தி நாட்டில் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தும் இந்த திட்டத்தை முடிவுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடியை நான் பாராட்டுகிறேன்" என்று மத்திய உள்துறை அமைச்சர் தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.